இலங்கையில், சுகாதார பராமரிப்பு வசதிகள் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் சிறந்த தரம்வாய்ந்த இடங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. சுகாதார பராமரிப்பானது நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அத்தோடு, பல காரணிகளும் ஒரு சுகாதார அமைப்பு எவ்வளவு வினைத்திறன்மிக்க விதமாக இருக்கிறது என்பதில் தாக்கம் செலுத்துகிறது. பொது சுகாதாரத் துறை 95 சதவீதமான உள்நோயாளர்கள் மற்றும் 50 சதவீதமான வெளிநோயாளர்களுக்கான சிகிச்சையை வழங்கி வருகிறது. கொள்கை உருவாக்கம், சுகாதார சட்ட உருவாக்கம், திட்ட கண்காணிப்பு, தொழில்நுட்ப மேற்பார்வை, சுகாதார தொழில்நுட்பங்கள், மனித வளங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகள் போன்ற நிர்வாக செயல்பாடுகளுக்கு சுகாதார அமைச்சு (MOH) பொறுப்பாக இருக்கிறது. ஒன்பது மாகாண அமைச்சுகளின் கீழ் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சை மற்றும் நோய்த் தடுப்பு சேவைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 588 வைத்தியசாலைகள் மற்றும் 517 முதன்மை பராமரிப்பு நிறுவனங்கள் உள்ளடங்களாக 1500 க்கும் அதிகமான சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் காணப்பட்டன. மேலும், 335 சுகாதார வைத்திய அதிகார பணிமனைகளும் உள்ளன. இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும் 555 அரசாங்க வைத்தியசாலைகள் காணப்படுவதோடு, அவை அனைத்து மக்களுக்கும் நோய்ப் பராமரிப்பு, தடுப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குகின்றன. அனைத்து பிரஜைகளும் குடியிருப்பாளர்களும் தமது பிரதேச சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவை ஏற்படும் போது, இரண்டாம் நிலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கும் பரிந்துரைக்கப்படலாம். தாதியர், மருந்தகம், ஆய்வுகூடம், கதிரியக்கவியல் மற்றும் மருத்துவப் பதிவு ஒருங்கிணைப்பாளர்கள் சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த மருத்துவக் குழுவின் ஒரு பகுதியினராகும்.