10th ஜன 2025
திட்டமிடாமல் அரச வைத்தியசாலையின் செயற்பாட்டிற்கு தேவைப்படாத பௌதீக வளங்களை வழங்குவதனால் வைத்தியசாலைகளுக்கும் அமைச்சுக்கும் பல்வேறு பிரச்சினைகளும் குற்றச்சாட்டுகளும் எழுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முறையான திட்டமிடல் இன்றி தேவையில்லாமல் கட்டடங்களும் மருத்துவ உபகரணங்களும் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுவதாகவும், அதன்பின் அவற்றை பயன்படுத்துவதற்கு அமைச்சு ஊழியர்களை வழங்குவதில்லை எனவும் அமைச்சர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் சீதுவ விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் சிகிச்சைச் சேவைகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.
மறைந்த கலைஞர் விஜய குமாரதுங்கவின் நினைவாக 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை மக்களிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் தலைவராக தற்போது கடமையாற்றி வருகின்றார்.
இவ் வைத்தியசாலையின் கீழ் இயங்கும் வெளிநோயாளர் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, பல்மருத்துவப் பிரிவு, ஆரம்ப சிகிச்சைப் பிரிவு, ஆய்வகச் சேவைகள், சத்திரசிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி பிரிவு உட்பட பல பிரிவுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், 2020 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான மருத்துவமனையின் செயல்பாடுகள், மற்றும் செலவுகள், நன்கொடை கள், மருத்துவ உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய மொத்த மதிப்பிடப்பட்ட மூலதன வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட நிர்வாக விவகாரங்களை அமைச்சர் பார்வையிட்டார்.
குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் திட்டத்தை இந்த மருத்துவமனையின் மூலம் முறையாகவும் பராமரிப்புடனும் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் தனது கருத்துக்களை முன்வைத்தார்
வைத்தியசாலையினால் வழங்கப்படும் நோயாளர் சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு அதிகபட்ச ஆதரவை வழங்கும் என குறிப்பிட்ட அமைச்சர் விஜய குமாரதுங்க வைத்தியசாலையினால் வழங்கப்படும் கண் தொடர்பான சிகிச்சை மற்றும் சத்திரசிகிச்சை சேவைகளையும் மேற்பார்வை செய்தார்.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, நிர்வாக குழு உறுப்பினர்களான என்.ஏ.உமகெலியா, ஆனந்த விமலவன்ச, வை.பி.சுமனாவதி, வைத்தியர் சாமர குமாரகே, டொக்டர் சரித் பொன்சேகா, பணிப்பாளர் ஜி.டி.ஏ.ரணவீர, தலைமை தாதி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர் ஏ.எம்.எச் கே அழககோன், கணக்காளர் பி.டி.டி.பி.என்.பேர்னாட், நிர்வாக அதிகாரி ஏ.ஏ.ஏ.எஸ்.கே.ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
The minister further mentioned that buildings and medical equipment are given to government hospitals unnecessarily without proper planning, and then the ministry is often accused of not providing the staff to use them.