1920ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கை ஒரு முதன்மையான சுகாதாரச் சேவை அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறது (1978ஆம் ஆண்டின் அல்மா ஆட்டா பிரகடனத்திற்கும் முன்பதாக). முக்கிய சுகாதாரச் சேவை சுட்டிக்காட்டிகளில் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பிறப்பின் போது ஆயுள் எதிர்பார்ப்புஇ தாய்சேய் நலம் மற்றும் இளங்குழவி மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் ஆகியன தெற்காசியாவில் சராசரி குறைவாக உள்ளது. எவ்வாறாயினும்இ இலங்கை ஒப்பளவில் சிறந்த சுகாதார சுட்டிக்காட்டிகளை வெளிப்படுத்தினாலும்இ உருவெடுத்து வரும் சுகாதாரம் சார்ந்த சவால்கள் காணப்படுகின்றன.