நோய்களைத் தடுப்பதற்கும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் அரசாங்கம், பொது சுகாதார மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம். இலங்கை மக்களுக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக நாம் வழிகாட்டல்களை வழங்குகிறோம். அதேபோன்று, தொற்று நோய்ப் பரவல்கள் மற்றும் சுற்றுச்சூழல் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப தயார்படுத்தப்பட்டு, அவை கண்டறியப்பட்டு, அவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயற்பாடின்மை போன்ற பிரச்சினைகளுக்கு ஆதார அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதன் மூலமும் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நாம் முயற்சிக்கிறோம்.
எமது சுகாதார ஊழியர்களின் திறன்கள், ஆளுமை மற்றும் திறமைகளை அதிகரிப்பதன் மூலம் எதிர்கால பொது சுகாதார சவால்களைச் சமாளிப்பதற்கு எமது கல்வித் திட்டம் தயார்படுத்துகிறது. நோய்த்தடுப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம், சுகாதார ஊக்குவிப்பு, தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சாத்தியமான சுகாதார அவசரநிலைகள் போன்ற பகுதிகளில் சுகாதார நிபுணர்களுக்கு எமது நிபுணர்கள் சான்றுகள் மற்றும் ஆய்வுக் கண்டுபிடிப்புகளை வழங்குகின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக சுகாதாரக் கொள்கை, மருத்துவம், பொது சுகாதார நடைமுறைகள் மற்றும் ஆய்வக விஞ்ஞானம் ஆகியவற்றில் எமது ஆய்வுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.